திங்களன்று மாலைதீவு செல்லும் ஜனாதிபதி அனுர..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு செல்லவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.