சிரேஷ்ட பத்திரிகையாளர் அமரர் க.ப.சிவம் நினைவாக. 27 ஆம் திகதி கண்டியில் சிறப்பு நிகழ்ச்சி
சிரேஷ்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த கலாபூ ஷணம் க . ப. சிவம் நினைவாக “நினைவலைள்” எனும் சிறப்பு நிகழ்ச்சியொன்று கண்டியில் நடைபெறவுள்ளது.
மலையக கலை கலாசார சங்க இரத் தினதீபம் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு கண்டி குமார வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில்
இந்நிகச்சசி இடம்பெற உள்ளது.
இதில் பிரதம அதிதியாக சேவா ஜோதி தேசாபிமானி எஸ். முத்தையா, மற்றும் கௌரவ அதிதியாக தேசகீர்த்தி லயன்ஸ் கேசவமூர்த்தி ,தேச கீர்த்தி மோகன் நாகலிங்கம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பேராசிரியர் துரை மனோகரன் நிகழ்வுக்கு தலைமை தாங்கவுள்ளார்.கலாபூஷணம் இரா. அ.இராமன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியுள்ளார்.
கலாபூஷணம் க.ப.சிவம் நினைவாக எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் பலரது சொற்பொழிகளும் கவிதைப் பொழிவும் ஊடகவியலாளர் கௌரவிப்புகளும் இடம் பெறுமென மலையக கலை கலாசாரச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் கலைஞர் ராஜா ஜென்கின்ஸ் தெரிவித்தார்.

( ரஷீத் எம். றியாழ்)