ஊடகவியலாளரும்,எழுத்தாளரும,சமூக சேவகியுமான ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்
தெஹிவலையைச் சேர்ந்த ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்.கிருங்கதெனியவைச் சேர்ந்த காலஞ்சென்ற பரீத் ஆசிரியரின் மனைவியும் பெளஸான்,ஸெரான் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் நவமணி ஆசிரிய பீடத்திலும் பணி புரிந்தார். நூல்கள் பலவற்றை எழுதியுள்ள இவர் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு காட்டினார். தெஹிவலை,நெதிமால இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகையின் பின் எடுத்துச் செல்லப்பட்டு தெஹிவலை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.