வட மத்திய மாகாண ஆளுனரால் திறந்து வைக்கப்பட்ட அனுராதபுர புத்தகக் கண்காட்சி
அனுராதபுரம் புத்தக கண்காட்சி வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வினால் அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
07 வது அனுராதபுரம் புத்தக கண்காட்சி வடமத்திய மாகாண நூலக சேவைகள் வாரியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சு அலுவலகம், அனுராதபுரம் மாநகர சபை அகஹசாய கலை மற்றும் கலாச்சார கூட்டு ஆகியவை இந்த நிகழ்வின் அனுசரணையாளர்களாக உள்ளனர். இலங்கையில் 25 கும் மேற்பட்ட முன்னணி புத்தக வெளியீட்டாளர்கள் புத்தகக் கண்காட்சிக்காக தங்கள் புத்தகக் கூடங்களை வழங்கியுள்ளது. இதற்கு இணைவதாக ஒவ்வொரு மாலையும் கலாச்சார கூற்றுகள் கொண்ட ஒரு கலாச்சார நகழ்ச்சி நடைபெறும்.
இந்த கண்காட்சி இன்று 24 முதல் 29 ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி நடைபெறும்.
இதன் போது வடமத்திய மாகாண பிரதான செயலாளர் ரஞ்சன ஜயசிங்க, அமைச்சின் செயலாளர் எஸ்.கே.ஜயலத் , ஆளுநரின் செயலாளர் என்.எச்.ஆர்.நிஷாந்த , மாவட்ட மேலதிகச் செயலாளர் சந்தியா அபேசேகர ,நூலக சேவைகள் சபையின் தலைவர் அனோமா ஜீ ராஜபக்ஷ அதன் பணிப்பாளர் வாசனா தில்ருக்ஷி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


( எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)