உள்நாடு

போதைக்கு அடிமையானவர்கள் 8ஆம் ஆண்டுக்கு குறைவாக கல்வி கற்றவர்கள்; ஜனாதிபதி அநுர

நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், 

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறைமை பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார, கல்வி மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது. அதிகமானவர்கள் கலந்துரையாடுகின்றார்கள் கேள்வியெழுப்பியுள்ளீர்கள் இதற்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன். 

இது வெறுமனே பாடவிதான மாற்றம் அல்ல ,மொத்த சமூகத்தையும் பொருளாதார கட்டமைப்பை நோக்கிய மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

சனத்தொகை பெருமானத்தில் 38ஆவது இடத்தில் இலங்கை இருகிகின்றது. இது சீனாவை விட அதிகம். 

எமது நாட்டில் இயற்கை வளம் இருந்தாலும் வணிக ரீதயாக எதுவும் பெரிதாக இல்லை ஆகவே, மனித வளத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவானர்கள் வறுமையாகவும் அறிவிலிகள் வசதியாகவும் இருக்கின்றார் இந்த முறை மாற்றப்பட வேண்டும். 

போதைக்கு அடிமையானவர்கள் 8ஆம் ஆண்டுக்கு குறைவாக கல்வி கற்றவர்கள் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதலில் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடசாலையை விட்டு செல்வது அதிகரித்துள்ளது. இவை மாற்றப்படவேண்டும். மாணவர்கள் பாடசாலைக்கு ஆர்வமாக செல்லும் நிலை உருவாக்கப்படவேண்டும். 

நல்லதொரு கல்வி மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது. எந்தவொரு மாணவனும், மாணவியும் இடையில் பாடசாலையை விட்டு செல்ல கூடாது. பெற்றோர் வெளிநாடு செல்லுதல், பாதுகாப்பின்மை, தனிப்பட்ட பிரச்சினை என மாணவர்கள் பலர் பாடசாலையை விட்டு சென்று விடுகின்றனர். 

எமது நாட்டு கல்வி தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதியுயர் கல்வி நிலையாக மாற்றப்படவேண்டும். 

கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு மாணவர்கள் கூட வருகை தராத பாடசாலைகள் 98 கணக்கில் எடுக்கப்பட்டடுள்ளது. 115 பாடசாலைகளில் வெறும் 10 மாணவர்கள் கல்வி கற்கும் நிலை காணப்படுகின்றது. 

705 பாடசாலைகளில் வெறும் 30 மாணவர்கள் உள்ள பாடசாலைகள், 1140 பாடசாலைகளில் வெறும் 100 மாணவர்கள், 1150 பாடசாலைகளில் 50ற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் நிலை காணப்படுகின்றது. இங்கு மனித வளம் விரயமாகின்றது இவை மாற்றப்படவேண்டும். 

நூற்றுக்கு 50 விகதமான மாணவர்கள் வருகை நாளாந்தம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆக மொத்தமாக 3144 பாடசாலைகளில் 100 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பாடசாலையின் நிலை மாற்றப்படவேண்டும். 

3இல்1 வீதமாக பாடசாலைகளில் 100மாணவர்களே இருக்கின்ஙறார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.

இது சிறந்த நிலையா? அங்கு விளையாட்டு சுற்றுலா என எதுவும் நடத்தப்படுவதில்லை. மாணவர்களின் கல்வி நிலை மேம்படுத்தப்படுவதில்லை. சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலை கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது.

சமூக பெருமானம் குறைந்த மாணவர்களுக்கு கிராம அனுபவத்தை தவிர வேறு எதுவுமே கிடைப்பதில்லை. புதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பாடசாலை செல்கின்றார்கள் பாடசாலை முடிந்து வீட்டிற்கு செல்கின்றார்கள் இந்த நிலை யாருக்கும் இனி ஏற்பட கூடாது. 

தங்களது பிள்ளைகளை கிராம பாடசாலைக்கு அனுப்ப மறுக்கம் பெற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது. கிராமத்தில் பாடசாலை தேவை. ஆனால், தங்களின் பிள்ளைகள் அங்க கல்வி கற்க அனுப்புவது கிடையாது. நகர் புற பாசாலைக்கு அனுப்புவதை முதல் நோக்கமாக கொண்டிருக்கின்றார்கள். 

பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர்கள் இருக்கின்றார்கள் . இது ஒரு நல்ல நிலையாக இருந்தாலும் அதை ஏற்க முடியாத நிலை தற்பேது எழுந்துள்ளது. 

மனிதவளம் வீண்விரயமாகின்றது. திருகோணமலை குச்சவெளி பிரதேசம் பண்டாரவளை, ஹல்துமுளை ஆகிய கல்வி வலயங்களில் வெறுமனே 3 மாணவர்கள் கல்வி பாடசாலைகளும் காணப்படுகின்றன. 

திருகோணமலை கல்வி வலையத்தில் 4 பிள்ளைகள் 4 ஆசிரியர்கள் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.

கல்வி சீரமைப்பு ஏன் அவசியம் என இப்போது புரிகின்றதா, மனித வளத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். மாணவர்களக்கு சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

எமது கிராமங்களில் வொலிபோல் விளையாட்டு திடல் இருந்தது. கிராம குளங்கள், வெசாக் தொரண் என பல வெளிகள செயற்பாடு இருந்தது ஆனால் இப்புாது உள்ள மாணவர்களுக்கு அப்படி எதுவுமே இல்லை. 

இயந்திரம் போல் மாணவர்கள் இருக்கின்றார்கள். எமது காலம் போல் பிள்ளைகள் இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றார்கள் அது உண்மைதான் எமது பிள்ளை எம்மை விட சிறந்த நிலைக்கு தான் வர வேண்டும். டியுஷன் வகுப்பு அதிகரித்துள்ளது. அவை தேவையற்ற ஒன்று. 

ஒரு இலக்கிய கவ்தையை இரசிக்க இலக்கிய உணர்வின்றி மாணவர்கள் இருக்கின்றார்கள். இயந்திர கல்வி நிலை குறைக்கப்படவேண்டும்.

அவிசாவளையில் இருந்து கொழும்புக்கு மாணவர்கள் படிக்க வருகை தருகின்றார்கள். பஸ்லில் வேணில் வகுப்பறையில் தூங்கிவிடுகின்றார்கள். இவர்களின் ரோபோ வாழ்க்கைமுறை மாற்றப்படவேண்டும். 

நேரடி வாழ்க்கையை வழங்க வேண்டும். எமது கல்வி ஒரு நேர்கோட்டில் செல்கின்றது. வைத்தியரின் பிள்ளை வைத்தியராகின்றது ஆசிரியரின் பிள்ளை ஆசியிராகின்றது இந்த நிலை மாற்றப்படவேண்டும். 

சமூகத்தில் பொறுப்பற்ற ஒரு நிலை காணப்படுகின்றது, இந்த நிலை எப்படி உருவானது, எமது வாழ்வியல் மாற்றம் இதற்கு அடிகோளாக மாறியது. கல்வி என்பது விரிந்த பாதைகளை கொண்ட ஒரு துறை, அதை சரியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இன்று அவர்களின் பாதையில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் இல்லை.

வெவ்வேறு துறையை தெரிவு செய்யாமல் ஒரே துறையை நோக்கி செல்லும் நிலையைாக மாற்றப்பட வேண்டும். கல்வி மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்படும் 29இல் தான் அவர்களின் தெரிவு தொடர்பில் கலந்துரையாட முடியும். 

10, 11 ஆம் தரங்களில் அந்த துறைக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்ய பெற்றோர் ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். மாற்றம் செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு. ஆனால், அந்த பாதை அவரது இலட்சிய பாதையை குழப்பாததாக இருக்கவேண்டும். வரலாற்றை பிள்ளை கற்கின்றது. அது ஆழமாக கற்க வேண்டிய பாடம் அல்ல அனுபவம். அதற்கான பாதை அமைக்கப்படவேண்டும். 

சமயம் தொடர்பிலும் ஆழமான அறிவை கொண்டு சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாக வேண்டும். கல்வி முறை மாற்றம் எமது சமூகத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய பாரிய மாற்றம். என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *