புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து எம்.பீ.க்களுக்கு விளக்கிய பிரதமர்..!
முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கும் சந்திப்பொன்று ஜூலை 22 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீதரன், அஜித் பெரேரா, ரோஹினி கவிரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்ததுடன், கல்வி சீர்திருத்தம் காலத்தின் தேவை என்றும், தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவிருக்கும் புதிய கல்வி சீர்திருத்தத்தின் நேர்மறையான அம்சங்களை ஆதரிப்பதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.









