மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை உடல் நலத்துடன் இருக்கிறார் எந்த பிரச்சினையும் இல்லை அமைச்சர் துரைமுருகன் தகவல்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை வியாழக்கிழமை காலை ஸ்டாலினுக்கு
ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் 4-வது நாளாக இன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதல்வர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஒரு பிரச்சினையும் இல்லை. முதல்வர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)