சுடர் விடும் ஆளுமை அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மானின் பணி நிறைவு பாராட்டு விழா
ஒலுவில் அல்-ஜாயிஷா மகளிர் கல்லூரியில் பணியாற்றி 35 வருட கல்விச் சேவையை திறன்பட பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மான்(சுடர் விடும் ஆளுமை) அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா 2025.07.20 ம் திகதி கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் அதிபர் எஸ்.எம்.பி.எம் அறூஸ் தலைமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம் றகுமத்துள்ளா விசேட அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதில் உபவேந்தர் யூ.எல்.ஏ.மஜீட் கௌரவ அதிதியாக வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்வியலாளர்கள்
அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மான் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





(இஸட்.ஏ.ஏ.றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர் )
