கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு; அமைச்சர் ஹதுன்நெத்தி
அம்பாறை மாவட்ட ஹிங்குறாண சீனித் தொழிற்சாலைக்குட்பட்ட பகுதிகளில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளைப் பெற, அவர்கள் பிரதிநிதிகள் ஜூலை 22ஆம் திகதி, SLMC தலைவர் ரவூப் ஹக்கீமை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார்.
பின்னர் அவர்கள் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த விடயங்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித் மற்றும் மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.