உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஹலால்தீன் பாராட்டு..!

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தியில் அதீத அக்கரையோடு கால நேரமின்றி பணியாற்றி வரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முன்னெடுப்புக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் நனறிகளையும் தெரிவித்துக் கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் சமூகச் செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.ஹலாதீன் தெரிவித்துளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த மாதம்
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற மாவட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச்செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஓட்டமாவடி பிர்தேச செயலகத்தினால் பிரதேச நன்மைகருதி பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.

அதிலும் குறிப்பாக, பிரதேச கைத்தொழிலாளர்களின் நன்மைகருதியும் தொழில் நிலையங்களால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நன்மைகருதியும் அரிசி ஆலை, மர ஆலை மற்றும் தொழில்பேட்டை அமைக்க 70 ஏக்கர் காணிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை பிரதேசத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

அத்துடன், பிரதேசத்தில் ஆற்றரிப்பினால் ஏற்படும்
பாதிப்புக்களைத்தடுப்பதற்காக அணைக்கட்டு, ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர சந்தி மற்றும் சாவனாட்டு சந்தி என்பவற்றுக்கான வீதி சமிக்சை, காவத்தமுனை வட்டாத்திமுனை பாலம் என பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கும் முன்னெடுப்புக்களும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *