சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவு
கடந்த சனிக்கிழமை (19/07/2025) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.சமீலுல் இலாஹி தலைமையில் 2025/26 ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
இதில் இவ் அமைப்பின் செயற்பாட்டாளர்களான ஏ. அப்ரத் அலி தலைவராகவும், எல்.எம். சிப்னாஸ் உப தலைவராகவும், எச்.எம். அமாஷிர் உப செயலாளராகவும், ஏ.எம். ஷஹி பொருளாளராகவும், எம்.எம். தலா அமைப்பாளராகவும், ஏ.என்.எம். ஜாபித் உப அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் ஏனைய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் எமது நண்பர்கள் வட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(𝐅𝐂𝐒𝐒𝐎 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐔𝐍𝐈𝐓 )