கலாநிதிப் பட்டம் பெற்றார்எஸ்.ஏ.அஸீஸ்
அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து எஸ்.ஏ. அஸீஸ் கலாநிதிப் பட்டம் (Honoris causa of Doctorate in commercial law ) பெற்றார்.
வரி மற்றும் வர்த்தக நிதி சட்டங்களில் இவர் விசேட தேர்ச்சிகளைப் பெற்றுள்ளதோடு, இவை சம்பந்தமாக பல ஆய்வுகளையும் (Research Works) செய்துள்ளார். இவரின் ஆக்கங்கள் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இஸ்லாமிய நிதி தொடர்பான இவரின் ஆய்வுகள் இலங்கையின் முன்னணி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் அஸீஸ் பட்டயக் கணக்கறிஞர் நிர்வாக ஆளுநர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
கொழும்பில் கணக்காய்வு வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனத்தை நடத்திவரும் இவர், ஓர் இஸ்லாமிய நிதி ஆலோசகராகவும் செயற்படுகின்றார்
அஸீஸ் கல்ஹின்னையைச் சேர்ந்த சிரேஷ்ட பட்டயக் கணக்கறிஞராவார்.
இவர் மர்ஹும்களான எச்.எல்.எம். ஸாலிஹ் மற்றும் பாத்துமா பீவி ஆகியோரின் புதல்வராவார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)