தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் சந்திப்பு..!
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் திருமதி எரோஷினி அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி தொடர்பான விடயங்களும், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான வசதிகள் இருந்தும் கல்வி அமைச்சால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின் தொகையினை அதிகரிக்க வேண்டும் எனவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் திருமதி எரோஷினி அவர்கள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி தொடர்பான விடயங்களும், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் பயிற்சிக்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின் தொகை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
(கே எ ஹமீட்)