சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக கற்பிட்டியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சியாஜ் நியமனம்..!
கற்பிட்டி பெரிய குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ் சர்வதேச மனித உரிமைகள் ஸ்தானத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களாக ஊடகவியலாளராக சேவையாற்றி வருவதுடன் எம் எஸ் மீடியா நெட்வொர்கின் நிறைவேற்று பணிப்பாளராகவும். கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளராகவும் சமூக சேவைகள் செயற்பாட்டாளராகவும் சேவையாற்றுகிறார்.
கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்னாள் செயலாளரான இவர் சித்தி ஜூவைரியா மர்ஹூம் ஹனிபா தம்பதிகளின் இளைய புதல்வராவார்.

