உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பேருவளை நகர சபை புதிய தலைவர்..!
பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் அஸாஹிர் முஹம்மத் மபாஸிம் 21ஆம் திகதி காலை பேருவளை நகர சபை அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டார்.புதிய தலைவருக்கு இதன் போது நகர சபை ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொது மக்களினாள் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. நகர சபை பூமியை வந்தடைந்த தலைவருக்கு வெற்றிலை கொடுத்து மலர் மாலை அனிவித்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தி சார்பில் நகர சபைக்கு தெரிவான இவர் புதிய தலைவர் தெரிவில் கூடுதலான வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
பேருவலை நகர சபையின் வரலாற்றில் முதல் தடவையாக இளம் வயதுடைய நகர பிதாவாகவும் ஒரு சாதாரன குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஒருவர் இப்பதவியில் அமர்வது விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் மஸ்ஸல பௌத்த விகாராதிபதி சங்கைக்குறிய ரம்புக்பிடிய ஸாஸனரத்ன தேரோ உட்பட விகாராதிபதிகள், சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் கலீபதுஷ் ஷாது மௌலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), கதீப் மௌலவி தீன் முஹம்மத் (மஹ்லரி) களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி, பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் அல் ஹாஜ் இப்திகார் ஜமீல், களுத்துறை, மாவட்ட அழைப்பாளர் எம்.எம்.எம். அம்ஜாத், களுத்துறை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி மஹேஷ், நகர சபை உப தலைவர் விமல சிறி சில்வா, பேருவளை பிரதேச செயலாளர் ஜானக பெரேரா, நகர சபை செயலாளர் திருமதி டப்லியு. குணவர்தண பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஆர் நவரத்ண நகர பிதாவின் குடும்ப உறுப்பினர்கள், நகர சபை முன்னாள் தலைவரும் உறுப்பினருமான மஸாஹிம் முஹம்மத், நகர சபை உறுப்பினர்கள் உட்பட நகர சபை அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு தலைவருமான அரூஸ் அஸரத், தேசிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் ரம்ஸான் சிஹாப்தீன், சீனன் கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்க செயலாளர் அஷ்கர் முபாரக் உட்பட உறுப்பினர்கள், பேருவளை வர்த்தகர் சங்க தலைவர் உட்ப உறுப்பினர்கள், பளன்ளிவாசல் நிர்வாகிகள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள். தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள், அரசியல்வாதிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய நகர பிதா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பைதுல் முபாரக் வதாரூல் முஸ்தபா புகாரித் தக்கியாவிற்கும் விஜயம் செய்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் சத்டிம ஹெட்டியாரச்சி ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீலும் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குறிய சேஹ் நாயகம் அவர்களையும் சந்தித்தார்.
நகர பிதா வரலாற்றுப் புகழ் மிகு கெச்சிமலை தர்காவுக்கும் ஏற்கனவே விஜயம் செய்து அங்கு சங்கைக்குறிய சேஹ் நாயகத்தையும் சந்தித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம். முக்தார்)

















