பேருவளை நகர சபைத் தலைவராக மபாஸிம் அஸாஹிர் நாளை பதவியேற்பு..!
பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் அஸாஹிர் முஹம்மத் மபாஸிம் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பேருவளை நகர சபை அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் நகர சபைக்கு தெரிவான இவர் புதிய தலைவர் தெரிவில் கூடுதலான வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேருவலை நகர சபையின் வரலாற்றில் முதல் தடவையாக இளம் வயதுடைய நகர பிதாவாகவும் ஒரு சாதாரன குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஒருவர் இப்பதவியில் அமர்வது விசேட அம்சமாகும்.
இந்த அமர்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான சந்திம ஹெட்டியாராச்சி, சர்வமத தலைவர்கள், நகர சபை உறுப்பினர்கள், நகர சபைச் செயலாளர் உட்பட நகர சபை அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத், தேசிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் ரம்ஸான் சிஹாப்தீன், தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள், அரசியல்வாதிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொள்வர்.
(பேருவளை – பீ.எம். முக்தார்)