தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் அல் வலீத் பின் காலித் காலமானார்..!
சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த தூங்கும் இளவரசர்” என்று அறியப்படும் இளவரசர்அல்-வலீத் பின்காலித் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அவரது மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஆழ்ந்த சோகத்துடனும், துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் இன்று காலமானார்’. இறுதிச் சடங்கு இன்று (20) ரியாத்தில் உள்ள மசூதியில் நடைபெறவுள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஒன்றில் சிக்கி 20 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த இளவரசருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் எந்த பலனும் இல்லாமல் கடைசியில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.