கண்டி நகர நடைபாதைகளிலுள்ள வியாபாரிகளை அகற்ற கண்டி மாநகரசபையில் தீர்மானம்..!
கண்டி நகர நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளை அகற்ற கண்டி மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று (18) மேயர் சந்திரசிறி விஜேநாயக்க தலைமையில் கூடியது. இக் கூட்டத்தில், சர்வ ஜன பலய கட்சி உறுப்பினர் ரோஹித லால் தர்மசிறி, இந்த பிரேரணையை கொண்டு வந்தார். ஆளும் கட்சிமற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரூம் இந்த பிரேரணைக்கு ஆதரவாக கைகளை உயர்த்தினர்.
அதன்படி, இனிமேல் கண்டி நகரில் சட்டத்துக்கு முரணான நடை பாதை வியாபாரத்தை தடை செய்யும் திட்டம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(ரஷீத் எம். றியாழ்)