மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமையில் சாதனையாளர் கௌரவிப்பு..!
மருதமுனை கமு/கமு அல் – மனார் மத்திய கல்லூரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விழா அல்மனார் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (19) பாடசாலை அதிபர் ஐ.எல். உபைதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
“சாதனையாளர் நாள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்தார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)









