அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்..!
அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் (17) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் தற்போதைய பிரச்சினைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், கடந்த காலத்தில் அடைந்த முன்னேற்றம் மற்றும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன , பேராசிரியர் சேன நானயக்கார , கருணா சிறி பலிஹேன ,பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின சமரக்கோன் வடமத்திய மாகாண பிரதான செயலாளர் வடமத்திய மாகாண அமைச்சு செயலாளர்கள் வடமத்திய மாகாண பிரதி பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் நிறுவனத் தலைவர்கள் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)







