அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் கௌரவிப்பு..!
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.உதுமாலெப்பையின் வழிகாட்டலில் கீழ் தலைவர் ஐ. எல்.மதீத் தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று டார்லிங் கிச்சன் (Darling Kitchen) மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம்.தாஹிர் உட்பட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஒரு சிலரும் கலந்து கொண்டனர்.
(ரிபாஸ் எம் எப்)


