கலாநிதி நஜீப் ஹாஜியின் வாழ்க்கைப் போராட்டம் நூல் வெளியீட்டு விழா..!
கலாநிதி நஜீப் பின் அமீர் ஆலிம் (நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் தர்கா டவுன் ) அளுத்கம அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் நுால் வெளியீடு 19.07.2025 சனிக்கிழமை பி.பகல் தர்கா நகர் மர்ஹபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர். தே. செந்தில் வேலவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் நூலின் முதல் பிரதியை நஜிப் பின் அமீர் திருமதி நஜீப் ஆகியோர்கள் பிரதம அதிதி செந்தில்வேலவரிடம் கையளித்தார்கள.
மற்றும் தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், உதவி ஆசிரியர் அஜ்வத் பாசி, மற்றும் பி.எம். முக்தார், நூலை எழுதிய நூலாசிரியர் பாயிஸா ஜூனைட் கைஸ், மற்றும் கலாநிதி நஜீப் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நூலை பற்றிய விமர்சனத்தை பஸ்லி ஹமீத் நிகழ்த்தினார்.
(அஷ்ரப் ஏ சமத்)








