உள்நாடு

உடதும்பர வேன் விபத்து ;மூவர் உயிரிழப்பு..!

உடதும்பர, மீமுரே, ஹபரகெட்டிய குறுக்கு வீதியில் நடந்த வேன் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ( 19) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தெல்தெனிய மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உடுதும்பர பொலிஸ் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்..

இறந்தவர்களில் இரண்டு பெண்கள் அடங்குவர் என்றும் அவர்கள் கடவத்தை மற்றும் மீரிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *