பாஸிய்யா ஷாதுலிய்யா அமைப்பு ஏற்பாட்டில் சிறார்களுக்கான ஒருநாள் செயலமர்வு
சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாத்தின் இளைஞர் பிரிவான பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பு சிறார்களுக்கான ஒரு நாள் செயலமர்வு சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆ பள்ளி வாசலில் இன்று (19) ஆரம்பமானது.
கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) ஆரம்ப உரை நிகழ்த்தியதோடு கலீபதுஷ் ஷாதுலி எம் ஐ எம் றபீக் (பஹ்ஜி) துஆ பிரார்த்தனை புரிந்தார்.
சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 200 சிறார்கள் இச்செயலமர்வில் பங்குபற்றினர்.
சீனன் கோட்டை பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா இளைஞர் அமைப்பின் தலைவர் ஸம்ஹான் ஹஸன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு சீனன் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட பணிப்பாளர் மெளலவி எம் ஜே எம் பஸ்லான் ( அஷ்ரபி -பீ ஏ) , கலாபீட அதிபர் மெளலவி அஸ்மிகான் ( முஅய்யிதி), குர்ஆன் மதாரிஸ் பணிப்பாளர் பக்ருத்தீன் (மிஸ்பாஹி), பள்ளிவாசல் இமாம் அஹ்மத் முபாரக் (மன்பஈ), சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அரூஸ் அனஸ், உறுப்பினர் அல்ஹாஜ் முஸ்னி உவைஸ் மற்றும் வாலிபர் ஹழரா ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







(பேருவளை நிருபர் – பீ. எம். முக்தார்)