நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் சேஷ்டை.பெளத்த விகாராதிபதி கைது.
வெளிநாட்டுப் பெண்மணி ஒருவரை முத்தமிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக உணவட்டுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த நியூசிலாந்தை சேர்ந்த 41 வயதுமிக்க பெண்மணி ஒருவர் விகாரைக்கு வருகை தந்திருந்தபோது அந்த விகாரையின் அதிபதி அவருக்கு உணவுகளை பரிமாறி உபசரித்த பின் அவரை அறை ஒன்றுக்குள் செல்லுமாறு பணித்துள்ளார்.
அவர் அறைக்குள் சென்றதும் பௌத்த பிக்கு அவரை முத்தமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணி இது குறித்து உணவட்டுன சுற்றாடல் பொலீசாரிடம் மேற்கொண்ட முறைப்படி பிரகாரம் பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாதிப்புக்குள்ளான பெண்மணியை கஹாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் பொலீசார் மேலும் தெரிவித்தனர்.