உள்நாடு

13000 ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை.

அடுத்த சில மாதங்களில் நாட்டில் கடுமையான வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய 13,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் பட்டதாரிகள் 13000 பேரை சேர்த்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தாக்கல் செய்திருக்கின்ற வழக்கானது உடனடியாக உள்ளது உடனடியாக நியமனங்களை வழங்குவதற்கு தடையாக இருந்ததாகவும் வழக்கு தொடர்கின்ற அதே நேரத்தில் புதிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது. நிதி அமைத்து இவ்வாசிரியர்கள் தொடர்பாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதே நேரம் பத்தாயிரம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காகவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்த அவர் நாட்டின் பாடசாலைகளில் தற்போது 43 ஆயிரம் பற்றாக்குறைகள் நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக இந்நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *