வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி உரிமங்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்யேக இடமொன்றை அமைக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு ஒகஸ்ட் 03 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறையை உத்தியோகப்பூர்வமாக தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் தற்காலிக சாரதி உரிமத்தைப் பெற வேண்டும்.
புதிய நடவடிக்கை,செயன்முறையை நெறிப்படுத்துவதையும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.