மனித உரிமை அமைப்பு உறுப்பினராக சீனன்கோட்டை மதனி
பேருவளை சீனன் கோட்டை ஸாவியா லேனைச் சேர்ந்த முஹம்மத் மதனி (பாயிஸ்) சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல சமூக சேவையாளரான இவர் சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் சிற்றூழியராகவும்,சீனன் கோட்டை பத்தை சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக சந்தை தொகுதி மோட்டார் சைக்கில் பாக்கிங் கண்கானிப்பாளராகவும் முன்னால் மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீலின் அலுவலக உதவியாளராகவும் பணியாற்றுகிறார்.
சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவரான இவர் மர்ஹூம்களான அல்லா பிச்சை ஜமால்தீன் மரிக்கார் பாத்திமா ஸலீமா தம்பதிகளின் புதல்வராவார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)