35 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைதாகிய நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் கிராண்பாஸ் 32 வயதுடைய நபர் நேற்று 16ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
வரலாற்றில் விமானப் பயணி ஒருவரினால் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் அருக்கொட தெரிவித்தார்.
அவரது பொதியிலிருந்து 9 வாகன உறுதிப்பாகங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளும் சுங்க அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டன.
கைதான நபர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விசாரனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
(அஷ்ரப் ஏ சமத்)