சாய்ந்தமருது மாவடி வீதியில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு..!
சாய்ந்தமருது – 3 ஆம் பிரிவு மாவடி வீதியின் வாடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய, மிக நீண்ட காலத்தின் பின்னர் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ நஜீம் தலைமையில் கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை (14,15) ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது.
இதன்போது ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை மாநகர ஆணையாளர், பொறியியலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)





