குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவுப் பொதுக் கூட்டம்
இம்முறை எமது நாட்டில் முஸ்லிம்கள் இனவாத மற்ற மிகவும் அமைதியான முறையில் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வர்த்தகத் துறையை ஊழலற்ற நேர்மையான முறையில முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசாங்கம் தயாரக இருக்கின்றது என்று குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. எம். அஸ்லம் தெரிவித்தார்.
குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு பொதுக் கூட்டம் புலுஸ்கை ஹோட்டலில் தலைவர் எம். வை. எம். கியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்டப் பாhரளுமன்ற உறுப்பினர் எம். கே. எம். அஸ்லம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக குருநாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர் அஸார்தீன் மொய்னுதீன் , குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகரி சாபி, குருநாகல் மாநகர சபை உறுப்பினர் டி. எம். இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமானா வங்கியின் பிரதி முகாமையாளர் தொழிலதிபர் ஏ. எம். எஸ், எம். எம். ராயிஸ் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.
புதிய நிர்வாகத் தெரிவின் போது தலைவராக கே. எச். எம். அனுஸ்டீன் அவர்களும், செயலாளராக மில்ராஜ் அவர்களும், பொருளாளராக எம். ஆர், எம். சம்சுடீன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது மூத்த வர்த்தகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




(இக்பால் அலி)