உள்நாடு

வட மத்திய மாகாண சபைக்கு மூன்று புதிய செயலாளர்கள் நியமனம்

வடமத்திய மாகாண சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று செயலாளர்கள் மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச விடமிருந்து தங்கள் நியமனக் கடிதங்களைப் (14) பெற்றுக் கொண்டனர்.

முன்னர் மேலதிக பிரதம செயலாளர் (பயிற்சி) பதவியை வகித்த நந்தன கலகொட மாகாண கூட்டுறவு உணவு வர்த்தகம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புதிய செயலாளராகவும் எம். ஸ்ரீ ஸ்காந்த குமார் புதிய மேலதிக பிரதம செயலாளராக (பயிற்சி) மற்றும் சுபாஜினி மதியழகன் மாகாண சபையின் புதிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆளுநரிமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மாகாண கூட்டுறவு மற்றும் உணவு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நந்தன கலகொட வடமத்திய மாகாண சபையில் இணைவதற்கு முன்பு நுவரெலியா மாவட்ட செயலாளராக பணியாற்றினார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரத்தில் சிரேஷ்ட அதிகாரியாவர்.கொத்மலை வீரசேகர மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலைப் பட்டத்தையும் களனி பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைப் பட்டத்தையும் பெற்று 2000 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துள்ளார்.

புதிய தலைமைப் பயிற்சி செயலாளர் எம். ஸ்ரீ ஸ்கந்த குமார் யாழ்ப்பாணம் ஜூனியன்  கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் மன்னார் மாவட்ட மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளதுடன்  நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாவர்.

மாகாண சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சுபாஜினி மதியழகன் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2004 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் முதலில் ஒட்டுசுட்டான் துணை செயலாளராக இவர் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு துணை செயலாளராக பணியாற்றியுள்ள இவர் வடமத்திய மாகாண சபையில் இணைந்து கொள்ள முன்பு கோப்பாய் பிரதேச செயலாளராக பணியாற்றியுள்ள இவர் இலங்கை நிர்வாக சேவை சிறப்பு தர அதிகாரியாவார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *