தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பு/அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய இரு அணிகளும் அகில இலங்கை போட்டிக்கு தெரிவு
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2025 ஆம் வருடத்திற்கான காற்பந்தாட்டப் போட்டிகள் இரு தினங்களாக புத்தளத்தில் நடைபெற்றன. அதில் புத்தளம் கல்வி வலையத்தின் Type || தர கஷ்டப்பிரதேச பாடசாலையான புத்தளம் வெட்டாளை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்யாலயத்தின் 16 மற்றும் 18 வயது அணிகள் பங்கு பற்றி முதலாம் இரண்டாம் இடங்களை பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 16 வயதிற்குட்பட்ட போட்டிகள் 2025.07.15 ஆம் திகதி பு/ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி அணியிடம் 3:1 என்ற கோல் கணக்கில் தோற்று 2 ஆம் இடத்தை அணி பெற்றுக் கொண்டது.
18 வயதின்கீழ் அணிகளுக்கான போட்டிகள் பு/எருக்கலம்பிட்டி மைதானத்தில் நடைபெற்றது. அதில் இறுதிப் போட்டியில் பலமிக்க வெண்ணப்புவ ஜோன் போல் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தி, . அதில் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வடமேல் மாகாண செம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
இவ்வெற்றியின் பங்குதாரர்களான அணியை சிறந்த திட்டமிடலுடன் வழி நடாத்திக் கொண்டிருக்கும் அதிபர் A. J. M. இல்ஹாம் , பிரதி அதிபரும், சுகாதாரப் பாட ஆசிரியருமாகிய A. J. M. இனூஸ், மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரான H. N. A. மொகமட் மற்றும் பொறுப்பாசிரியர்களான N. M. ஜெஸீம் , M. R.M. ஜபீர் ஆகியோருக்கும், ஆசிரியர்கள், SDEC, PPA, மாணவர்கள், பெற்றோர்கள் ஏனைய நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.



