உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற வத்தல்பொல ஜீனியஸ் பார்க் கல்வி நிறுவன பரிசளிப்பு விழா..!

பாணந்துறை ஹேனமுல்லை, வத்தல்பொல வீதியில் ஹிமாயா இப்ராஹிம் BSc,MSc Dip in Journalism இனால் வழி நடாத்தப்பட்டு வரும் ஜீனியஸ்பார்க் கல்வி நிறுவனத்தின் 18ஆவது வருட பரிசளிப்பு வைபவம் மொறட்டுவை எகடஉயன அரபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கடந்த (13.07.2025) ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி அல்ஹாஜ் நஜீப் பின் அமீர் ஆலிம் மற்றும் இந்நிகழ்விற்கு பிரதான ஊடக அனுசரணை வழங்கிய தேசிய தமிழ் நாளிதழ் தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர், பிரதம அதிதியாக டி செந்தில் வேலவர் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பதிதிகளாக ஹொரேத்துடுவை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ். எச். எம். முத்தலிப், ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் ஏ .ஆர். எம். நிபாத், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமைத்துவ உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் பீ.எம். முக்தார், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ . எல்.எம் சத்தார் உட்பட பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ரிஷார்ட் திரு ரஹீம், அபாகஸ் கல்வி நிறுவனத்தின் மருதானை கிளைப் பணிப்பாளர் திருமதி எம். எப் நிரோஷா உட்பட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பரிபாலன அலகு அதிகாரி எம். றிஸ்வி மற்றும் ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் வாரமஞ்சரி நாளிதழ் ஊடக அனுசரணையுடன் நடந்தேறிய இந்நிகழ்வில் ஜீனியஸ்பார்க் கல்வி நிறுவனத்தின் பகுதி நேர வகுப்புகளில் கலந்து கொண்ட தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளை தாண்டிய, அண்மித்த மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சிகளின் இடையே மேற்படி நிறுவன மாணவ மாணவிகளால் மேடையேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளால் அவை கலை கட்டியதை அவதானிக்க முடிந்தது.

அபாகஸ் கல்வி நிறுவனத்தினரால் அபாகஸ் பாட பயிற்சி நெறி குறித்த அறிமுக செயற்திட்டம் ஒன்றும் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

தொடர்ச்சியாக பிரதான ஊடக அனுசரனை வழங்கி வரும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தினகரன் வார மஞ்சரி நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு டி செந்தில் வேலவர் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியான கலாநிதி அல்ஹாஜ் நஜீப் பின் அமீர் ஆலிம் அவர்களது கல்விச் சேவைக்கான சமூக சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜீனியஸ் பார்க் நிறுவன பணிப்பாளர் ஹிமாயா இப்ராஹிமுக்கு முன்னோடி ஆசான்களாகவும் ஆலோசனை வழிகாட்டிகளாக இருந்த ஆசிரியைகளான முர்ஷிதா ஆசிரியை, ஆமினா ஜிப்ரி ஆசிரியை, சாஜிதா ஆசிரியை ஆகியோருக்கும் அதிபர் எம் முத்தலிப் ஆசிரியர் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன. மேலும் இந்நிறுவன வளர்ச்சியில் ஊடகங்கள் ரீதியாக உதவி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ எல் எம் சத்தார், பீ எம் முக்தார், எம். றிஸ்வி, ஏ ஆர் எம் நிபாத் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி. கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதி நஜீப ப் பின் அமீர் ஆலிம் அவர்களுடைய உரையில் :
2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று இன்று கௌரவம் பெறுகிறீர்கள். ஆனால் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் நான் தோற்றுப் போனேன். அந்தத் தோல்வியே எனக்கு முன்னேற்ற படிகளாக இன்று கலாநிதியாகி இந்த வைபவத்தை போன்று பல நிகழ்வுகளில் எல்லாம் பிரதம அதிதியாக கௌரவம் பெற்று வருகிறேன். இதுபோல் இப் பரீட்சையில் தோற்றவர்கள் மனம் தளராது சிறந்த முறையில் கல்வியை மேற்கொண்டு தலைவர்களாக வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதம அதிதி லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் டி செந்தில் வேலவர் உரையில், எதிர்காலத்தில் தம் பிள்ளைகள் வைத்தியர் பொறியியல் துறைகளில் உயர் பதவிகளில் அமர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்கால எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே பாடசாலைகளோடு இத்தகைய கல்வி நிறுவனங்களும் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றன. கல்விக்கு கை கொடுக்க வேண்டும் என்ற உயர் எண்ணத்துடனேயே எமது தினகரன் நாளிதழ் வார இதழ்களும் அவ்வப்போது பாட பயிற்சி பக்கங்களை வழங்கி வருவதோடு இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுசரணைகளும் வழங்கியும் வருகிறது.

அபாகஸ் நிறுவன பணிப்பாளர் உரையில், கற்றவை மனதில் பதியவும் பரீட்சைகளில் தேர்ச்சி பெறவும் ஞாபகசக்தி இன்றியமையாததாகும். இதற்கான பயிற்சி பாடநெறி ஒன்றாகவே அபாகஸ் முறைமை விளங்குகிறது. இதனை நாடளாவிய ரீதியில் நாம் போதனா நிறுவனங்களை நிறுவி மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் பணியில் செயற்பட்டு வருகிறோம். ஹொரேத்துடுவை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ். எச். எம் முத்தலிப் ஆசிரியர் உரையில், ஒழுக்கம் நற்குணம் இல்லாத பொறியியலாளர், வைத்தியரால் அல்லது வேறு துறை சார்ந்தோர்களால் சமூகத்திற்கு அத்திய அவசியமான நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. எனவே நற்குண நல்லொழுக்கமுள்ள கல்வி ஒன்றை எமது மாணவ சந்ததியினருக்கு வழங்குவது எம் அனைவரினதும் இன்றைய தேவையாகும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
பல அதிதிகள் மேடைகளில் உரைய நிகழ்த்தியதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இனிதாக நிறைவுகள் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது

( பீ.எம். முக்தார் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *