வட மத்திய மாகாண சபையில் முதல் தமிழ் பெண் செயலாளர் நியமனம்
வடமத்திய மாகாண சபையின் முதல் தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபாஜினி மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண சபை வரலாற்றில் முதன் முதலில் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை (14) பொறுப்பேற்றுக் கொண்டார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி மதியழகன் நிர்வாக சேவை சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வடமத்திய மாகாண சபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)