மேற்கிந்தியத் தீவுகள் அணியை 27 ஓட்டங்களுக்குள் சுருட்டி வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா
3ஆவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெறும் 27 ஓட்டங்களுக்குள் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சுருட்டிய அவுஸ்திரேலிய அணி 176 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் முதலில் நிறைவுற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியிருக்க, 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் திகதி பகலிரவு போட்டியாக கிங்ஸ்டனில் ஆரம்பித்திருந்தது.
இதில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 225 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து. துடுப்பாட்டத்தில் ஸ்மித் 48 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷ்மர் ஜோஸப் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 143 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் கெம்பல் 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 82 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களையே பெற்றுக் கொள்ள முடிந்தது. துடுப்பாட்டத்தில் கிறீன் 42 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அல்ஷாரி ஜோஸப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் அவுஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிச்செல் ஸ்டார்க் முதல் ஓவரில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். பின்னர் வேகத்தில் ம ஸ்டார்க் மற்றும் போலண்ட் ஆகியோர் மிரட்ட வெறும் 27 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி. துடுப்பாட்டத்தில் கிரேவெஷ் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டமான 11 ஐ பெற்றார். இதில் 7 வீரர்கள் ஓட்டமின்றி டக் அவுட் ஆகியிருந்தனர். பந்துவீச்சில் ஸ்டார்க் 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்டடினார். இதனால் அவுஸ்திரேலிய அணி 176 ஓட்டங்களால் வென்று தொடரை வெள்ளையடித்து.
மேலும் உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த மிக மோசமான சாதனையில் இது 2ஆவது இடத்தில் பதியப்பட்டது. இதில் முதல் இடத்தில் 1955ஆம் அணிடு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 26 ஓட்ட
ங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்த நியூஸிலாந்து அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)