புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் 21 வயதுக்குட்பட்ட அணயினர் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது.
மாகாண மட்டத்தில் நடைபெற்ற இந்த போட்டி தொடர் திங்கட்கிழமை (14) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந்த உதைப்பந்தாட்ட தொடரில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் 15 பாடசாலை அணிகள் பங்கேற்றன.
இத்தொடரின் இறுதிப்போட்டியில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியும், மாதம்பை அல் மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலய அணியும் பங்கேற்றன.
பரபரப்பான இறுதிப் போட்டியில்
01 : 00 என்ற கோல் அடிப்படையில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று மாகாண சம்பியனானது.
இதன் மூலம் அடுத்து வரும் மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் பங்கேற்க கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது.
இவ் அணியை பயிற்றுவித்த விளையாட்டு பொறுப்பாசிரியர் என்.எம். அப்ரார் அவர்களின் அயராத முயற்சியினால் இந்த வெற்றி இலக்கு அடையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)