கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தமைக்குவிவசாயிகள் நன்றி பாராட்டு
கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பம் செய்தமைக்காக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவை அழைத்து இத்திட்டத்தால் பயனடையும் பயனாளிகளான விவசாயிகள் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி, நன்றி பாராட்டிய நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெய்னாகாடு பிரதேசத்தில் இன்று (14) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத்திட்டத்தின் கீழ்க் கரை வேலைத்திட்டத்தை பார்வையிட்டு, இவ்வேலைத்திட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தமையும் குறிப்பிடத்தக்கது.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)