மீரிகம தூரியன் தோட்டத்தில் துப்பாக்கி சூடு..! நபரொருவர் பலி..!
மீரிகமவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மீரிகம காணியொன்றில் அனுமதியின்றி தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை அந்தக் காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவர் மீரிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.