புத்தளம் அக்கரயணத்தீவு பகுதியில் புதருக்குள் இருந்து 1330 கிலோ 300 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு..!
புத்தளம் அக்கரயண்த்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1330 கிலோ மற்றும் 300 கிராம் பீடி இலைகள் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கடற்படையினர் அதனை கைப்பற்றியுள்னர் .
அதன்படி சனிக்கிழமை (12) புத்தளம் அக்கரயண்த்தீவு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் போது அந்த பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 39 பொதிககள் ஆய்வு செய்யப்பட்டன அதன்படி சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கடத்தல் காரர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சந்தேகிக்கப்படும் சுமார் 1330 கிலோ மற்றும் 300 கிராம் பீடி இலைகள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டன
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
