Saturday, August 30, 2025
Latest:
உள்நாடு

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி..!

நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.

அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை குறித்த விவரங்களை வெளிப்படுத்திய அவர், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள காவல் நிலையங்கள் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் முதல் கட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *