உள்நாடு

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பேருவளை நகர சபையை வென்றது..!

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பேருவளை நகர சபையை கைப்பற்றியுள்ளது.பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மபாஸிம் அஸாஹிர் தெரிவு செய்யப்பட்டதோடு உப தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த விமலசிரி சில்வா தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை நகர சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவராகியோரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 14ஆம் திகதி பேருவளை நகர சபை கூட்ட மண்டபத்தில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஸாரங்கிகா ஜெயசுந்தர தலைமையில் காலை 10.15 மணிக்கு நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி சார்பில் மபாஸிம் அஸாஹிரின் பெயரும் சுயேட்சை குழு சார்பில் அல்-ஹாஜ் அஸாம் பளீலின் பெயரும் பிரேரிக்கப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

திறந்த வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வினவிய போது திறந்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 9 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 7 உருப்பினர்களும் கையுயர்த்தி தமது விருக்கத்தைத் தெரிவித்தனர்.அதனை அடுத்து திறந்த வாக்கெடுப்பில் 9 வாக்குகளைப் பெற்று மபாஸிம் நஸாஹிர் தலைவராக தெரிவானார்.

உப தலைவராக விமலசிரி சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.இதன் போது 7 உருப்பினர்களைக் கொண்ட சுயேட்சைக்குளு கூச்சலிட்டவாரு சபையிலிருந்து வெளியேறினர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்தி குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத் உட்பட தேசிய மக்கள் சக்தி பேருவளை முக்கியஸ்தர் ரம்ஸான் சிஹாப்தீன், சுயேட்சை குழு சார்பில் ருஸ்லி உவைஸ்,நகர சபை செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேருவளை நகர சபை வளவு மற்றும் பேருவளை நகரில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டியுந்தமை விசேட அம்சமாகும்.

புதிய தலைவர் மபாஸிம் அஸாஹிர் உப தலைவர் விமலசிரி சில்வா உட்பட உறுப்பினர்களுக்கு அதிதிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *