உயர்தர உயிரியல் பிரிவில் முதல் 100 இடங்களில் 10 முஸ்லிம் மாணவர்கள்..!
அண்மையில் வெளியான 2024ம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியான முதல் 100 இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இது முஸ்லிம் சமூக வரலாற்றில் முதற் தடவையாக அடையப்பட்ட சாதனையாகும்.
கல்வியில் தேசிய ரீதியான சாதனை படைக்கும் முஸ்லிம் மாணவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நிறுவனங்களினாலும் பிராந்திய நிறுவனங்களினாலும் பாராட்டி கௌரவிக்கப்படும் கலாச்சாரம் பரலவாக உயிர்ப்பாக வேண்டும்.
மாணவர்களின் சாதனைகள் இனங்க் காணப்பட்டு உரிய வேளையில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்படும் இடத்து மென்மேலும் இச்சாதனைகள் புரிய வளரும் மாணவர்களுக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.