வயம்ப பல்கலைக்கழகத்தில்சவுதி அபிவிருத்தி நிதிய நிதியுதவியிலானகட்டிட திறப்பு விழா..!
சவுதி அரேபியா இலங்கையின் மிக நட்பு நாடுகளில் ஒன்று. இலங்கைக்கு அன்று தொட்டு இன்று வரை அனைத்து அபிவிருத்தி பொருளாதார உட்கட்டமைப்பு மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறது சவுதி. சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு ஐம்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு நிலவிவருகிறது.
இந்த 50 வருட உறவின் ஊடாக இலங்கையின் உட்கட்டமைப்பு பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. அண்மையில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் சவுதி – இலங்கை 50 வருட நிறைவு விழா கொழும்பு ஐ.சி.ரி ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றமையும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
அதேவேளை இலங்கையின் அபிவிருத்திக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தினூடாக சவுதி பாரிய பங்களிப்புக்களை தொடர்ந்தும் நல்கிவருகிறது. அந்த வகையில்சவுதி அபிவிருத்தி நிதியம் (Saudi Fund for Development – SFD) இலங்கையின் 15 அபிவிருத்திக் கடன்களை வழங்கியுள்ளது. இவை மொத்தம் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
இவை தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், வீதிகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் 13 திட்டங்களை உள்ளடக்கியுள்ளன.
அவற்றில் முக்கிய திட்டங்களாவன,
1981 இல் கொழும்பு குடிநீர் திட்டம் – 29.7 மில்லியன் டொலர்
1981 இல் கொழும்பு மின் வள பரிமாற்றத் திட்டம் – 19.8 மில்லியன் டொலர்
1983 இல் மகாவலி மற்றும் களுகங்க நதி அபிவிருத்தி திட்டம் (பகுதி பி) 24.7 மில்லியன் டொலர்
2002 இல் கொழும்பு வைத்தியசாலைகள் அபிவிருத்தித் திட்டம் – 12 மில்லியன் டொலர்
2004 இல் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி அபிவிருத்தித் திட்டம் – 10.7 மில்லியன் டொலர்
2008 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நரம்பியல் தொகுதி (வலிப்பு நோய்களுக்கான சிகிச்சை பிரிவு) – 20 மில்லியன் டொலர்
2008 இல் கொழும்பு சுகாதாரத் திட்டத்திற்கென மேலதிக நிதி – 2.94 மில்லியன் டொலர்
2010 இல் களுகங்கை அபிவிருத்தி திட்டம் – 46.1 மில்லியன் டொலர்
2012 இல் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திட்டம் – 59.9 மில்லியன் டொலர்
2015 இல் பேராதெனிய – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டம் – 60 மில்லியன் டொலர்
2015 இல் சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கான மேலதிக நிதி – 12 மில்லியன் டொலர்
2017 இலங்கை களுகங்கை வடக்கு முனை அபிவிருத்தித் திட்டம் – 44.8 மில்லியன் டொலர்
2017 இல் வயம்ப பல்கலைக்கழக நகர மேம்பாட்டு திட்டம் – 28 மில்லியன் டொலர்
2018 இல் களுகங்கை அபிவிருத்தி திட்டத்திற்கென மேலதிக நிதி – 15.8 மில்லியன் டொலர்
சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்தி திட்டம்—50 மில்லியன் டொலர்
வயம்ப பல்கலைக்கழக நகரத் திட்டம்:
2017 அக்டோபர் 24 ஆம் திகதி, 28 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 105 மில்லியன் சவுதி ரியால்) அளவிலான கடன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இத்திட்டம் வயம்ப பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதுடன் சுமார் 5,000 மாணவ, மாணவியருக்கு உயர் கல்விச் சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டது.
அத்துடன் குளியாபிட்டிய மற்றும் மாகந்துர பகுதிகளில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கங்களின் கற்றல் வளங்களை விரிவுபடுத்தல், கல்வி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், மற்றும் பல்கலைக்கழக வளாகத்தை கவர்ச்சிகரமாக மேம்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கியதுமாகும்.
அந்த வகையில் வயம்ப பல்கலைக்கழகத்தின் கட்டிட திறப்பு விழா இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பேராசிரியர் சுல்தான் பின் அப்துல் ரஹ்மான் அல் -மர்ஷத், சவுதி அரேபியாவில் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோரின் பங்குபற்றுதல்களுடன் (14.07.2025) இடம்பெற உள்ளது.






இவ்வைபவத்தின் நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பேராசிரியர் சுல்தான் பின் அப்துல் ரஹ்மான் அல் -மர்ஷத், சவுதி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதனுடன் இணைந்த தூதுக்குழுவினர் ஆகியோரை இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதில் பெருமிதமடைகிறது. இந்நிதியத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளின் வருகையும் அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகளும் இலங்கை மக்களுக்குக் கிடைக்க மாபெரும் வரப்பிரசாதமாகும்.
சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியம் இலங்கை பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதிலும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், இலங்கை மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலும் முன்னணியில் திகழுகிறது. இந்த முயற்சிகள் சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பெரிதும் பங்களித்து வருகின்றன. மேலும் சகோதர நாடுகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றன.
இதேவேளை, சவுதி அபிவிருத்தி நிதியத்தின் இம்மகத்தான சேவைகளை ஒரு நாளும் மறக்க முடியாது.
இது இலங்கையின் பொருளாதாரத்தை பொதுவாக மேம்படுத்துவதற்கும், பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கும், நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்கும் விரிவாக்குவதற்கும், மற்றும் அரசாங்கத்தினதும் இலங்கை மக்களினதும் பிற அடிப்படை தேவைகளை உருவாக்கும் வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை மக்களுக்கு வழங்கும் உதவிகளாகும்.
இவ்விடயம் சவுதி அரேபியாவின் ஆட்சியாளர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் புதியதொன்றல்ல, மாறாக இது சவுதி அரேபிய ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் தொட்டு இன்றைய ஆட்சியாளர்களான இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவளரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் காலம் வரை அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் இச்சிறப்பான சேவைகளைச் செய்து வருகின்றனர்.
சவுதி – இலங்கை உறவு 50 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது கவனிக்கத்தக்கது, அக்காலத்திலிருந்து இன்று வரை, இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்கு பலவழிகளிலும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கிவருகிறது. அத்தோடு இந்நாட்டு மக்களுக்கு பலவித மனிதாபிமான, நிவாரண மற்றும் மேம்பாட்டு உதவி ஒத்துழைப்புக்களையும் தொடர்ந்நதும் வழங்கி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தி பலப்படுத்துவதில் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அளப்பரிய பங்களிப்புக்களை நல்கிவருகிறார். அவர் மிகச் சிறந்த முன்மாதிரி மிக்க தூதுவர். சவுதி – இலங்கை இராஜதந்தி உறவின் தனித்துவ அடையாளமாகத் திகழுகிறார். அவரது பதவிக் காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவு பெரிதும் பலம் பெற்று சக்தி பெற்றுள்ளது.
சுருங்கக் கூறின் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளைப் பலப்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான தூதராக சவுதி அரேபிய தூதுவர் திகழுகிறார் எனலாம். இலங்கைக்கும் உலகளாவிய மனிதாபிமானத்துக்கும் தொடர்ந்தும் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் சவுதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசர், மற்றும்இலங்கைக்கு வருகை தந்துள்ள சவுதி அரேபிய அபிவிருத்தி நிதித் தலைவர் மற்றும் மான்புமிகு தூதுவர் அனைவருக்கும் இறைவன் அருள்புரியட்டும்.

எம்.எச். ஷைஹுத்தீன் மதனி
பணிப்பாளர்
அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு
