உள்நாடு

வட மத்தியில் நிலவும் கல்விப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.பிரதமர் ஹரிணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்..!

வடமத்திய மாகாணத்தில் பல கல்விப் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக இதுவரை வலயக் கல்விப்பணிப்பாளர் கள் முறையாக நியமிக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்படவில்லை.அதிபர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை இவைகள் அனைத்தும் தீர்க்கப் படவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண பிராந்திய மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் (12) நடைபெற்ற போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

2026 கல்வி  ஆண்டுக்கான திட்டங்களை கல்வி அமைச்சு எடுத்து வருகிறது.மேலும் மாகாண மட்டத்தில் கல்வியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை என்று கூறுகின்றனர் ஆனால் மேலதிக சேவையில் உள்ள 46 அதிபர்கள் உள்ளனர். பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை என்று கூறுகின்றனர் ஆனால் 16 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர்.இந்நிலைமை அவசரமாக மாற  வேண்டும்.முறையான இடமாற்றங்கள் இடம்பெற வேண்டும்.

நேர்காணல் நடாத்தி முறையாக நியமிக்கப்பட்டாத வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு முறையான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *