மேல் மாகாண தமிழ்த் தினப் போட்டி அங்குரார்ப்பண நிகழ்வு..!
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஆர். தேவபந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி (2025) மேல் மாகாணம் அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை 12, ஜூலை 2025 கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
மேல் மாகாணத்தின் தமிழ் மொழி பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜீப் தலைமையில் நடைபெற்றது.
விஷேட அதிதி கலாநிதி சபா அதிரதன் சிரேஷ்ட விரிவுரையாளர் -கல்விப் பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்,
வரவேற்புரையை மூ.வேந்தன் அதிபர் கொழும்பு விவேகானந்தா கல்லூரி…..அவர்கள் ஆற்றினார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டது.
அத்துடன் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான மாணவர்களின் கலை, இலக்கியம், நடனம், பா ஓதுதல், பேச்சு, இசை, அறிவிப்பாளர், போன்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஒருங்கிணைப்பாளர் முல்லை முஸ்ரிபா செயலாற்றினார்.
எதிர்வரும் 20ஆம் திகதி விவேகானந்தா பாடசாலையில் கூட்ட மண்டபத்தில் நடைபெறும்
மேல் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பரிசளிப்பு வைபவம் மேல் மாகாண ஆளுநர் பிரதம அதிதியாகக் கொண்டு நடைபெறும்.
(அஷ்ரப் ஏ சமத்)
