உலகம்

முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா உள்ளிட்ட 3 பேர்கள் நியமனம் எம். பி. பதவி..! ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு..!

பாராளுமன்றத்தில் இரு அவைகளில் மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று ஜனாதிபதி, அந்த பட்டியலில் உள்ளவர்கள் மாநிலங்களவை எம்.பி.,யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.

அவர்கள் மாநிலங்களவை தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர். தற்போது, 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை அறிவித்து உள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வக்கீல் உஜ்வல் நிகம். கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர்.
முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா. வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் விரைவில் மாநிலங்களவை தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *