கஹட்டோவிட்ட பத்ரியாவில் மொஹம்மத் இன்சாப் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 9A..!
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இம்முறை ஆண் மாணவர் ஒருவர் மொஹம்மத் இன்சாப் ஒன்பது பாடங்களிலும் 9A அதிவிசேட சித்தியடைந்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
இது தவிர 7 A அதி விசேட சித்தியை இரண்டு மாணவர்களும்,6 A அதி விசேட சித்தியை இரண்டு ஆண் மாணவர்கள் உட்பட மூன்று பேரும்,5 A அதி விசேட சித்தியை 3 ஆண்மாணவர்களும் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
அல் பத்ரியாவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 61 மாணவர்களில் 67.2 வீத மாணவர்கள் நேரடியாக உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 1 மாணவர் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள பகுப்பாய்வின்படிதெரிவுப் ( பக்கட்) பாடங்களில் அதி கூடிய சித்தி வீதம் அவதானிக்கப்பட்டுள்ளது. சிங்களம், வணிகக் கல்வி, அரபு பாடங்களில் 100 வீத சித்தியும் சுகாதாரம் 97, தமிழ் இலக்கியம் 92 வீத சித்தியும் பதிவாகியுள்ளது. அரபு மொழியில் ஒரே ஒரு மாணவர் தோற்றி A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
அடிப்படைப் பாடங்களில் இஸ்லாம் பாடத்தில் 90 வீத சித்தி பதிவாகியுள்ளது. இஸ்லாம் பாடத்திலேயே அதி கூடிய A சித்தியும் பெறப்பட்டுள்ளது. 61 பேரில் 23 பேர் (38 வீதம்) A தரத்தில் சித்தியடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழ் மொழியில் 13 பேரும் ( 15 B, 14 C ) கணிதத்தில் 11 பேரும் வரலாற்றில் 9 பேரும் A சித்தி பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 3 A , 12 B சித்திகள் பதிவாகியுள்ளன.
(கஹட்டோவிட்ட- எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்)