கண்டி தேசிய வைத்தியசாலையின் 3வது மாடியிலிருந்து வீழ்ந்த தொழிலாளி மரணம்..!
கண்டி தேசிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் வர்ணம் பூசிக் கொண்டிருந்த 71 வயது தொழிலாளி ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ம.ணமடைந்துள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் நேற்று (12) மாலை நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் கண்டி ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
மரணித்தவரின் சடலம் கண்டி மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
( ரஷீத் எம். றியாழ் )