உள்நாடு

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகாவில் 6 மாணவிகள் 9 ஏ பெற்று வரலாற்று சாதனை..!

கம்பஹா மாவட்டத்தில் இருக்கும் ஒரேயொரு முஸ்லிம் மகளிர் கல்லூரியாக திகழும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவில் இருந்து இம்முறை 6 மாணவிகள் அதி விசேட சித்தியை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளனர்.

9 பாடங்களிலும் 9A சித்தி பெற்ற மாணவிகளின் பெயர் விபரங்கள் வருமாறு.

இவர்களின் பெயர் விபரம் முறையே
1.எம்.ஐ.இபாதா.
2.எம்.ஐ.இஷ்ரத் ரஹ்னா
3.எம்.ஆர்.ரஹ்மா ஸைனப்.
4.எம்.எப்.ஸனா
5.எம்.என்.ஸபா
6.எம்.ஆர்.எப் அரீஜ்

இது தவிர 8ஏ,5ஏ,6ஏ அதிவிசேட சித்திபெற்றவர்கள் ஒருவர் வீதமும் 5ஏ அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள் இருவரும் 4 ஏ அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள் நால்வரும் இம்முறை வெளியான பெறுபேற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் .

மொத்தமாக 46 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி கணித பாட சித்தியுடன் உயர் தரத்துக்கு 33 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர் இது மொத்த சித்தி வீதத்தில் 72% வீதம் ஆகும்.
ஐந்து பாடங்களிலும்

கணித பாடம் தவிர்த்து 37 மாணவிகள் சித்தியடைந்திருப்பதுடன் இது நூற்று வீதத்தில் 80% ஆகும்.

ஐந்து பாடங்களிலும் 3C சித்தியோடு சித்தி பெற்றுள்ள மாணவிகள் 38 பேர்கள் ஆகும்.
இதன்படி அதி சிறந்த பெறுபேற்று புள்ளிவிபரத்தின் படி இம்முறை வெளிவந்த கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவின் சாதாரண தர பெறுபேற்று சுருக்கத்தை கீழுள்ளவாறு சுருக்கி நோக்க முடியும்.
9A. 6
8A B. 1
7A. 2C. 1
6A. 3B. 1
5A. 2
4A. 4

9 பாடங்களிலும் A சித்தியை பெற்றுக்கொடுத்துள்ளமை பாலிக்காவின் வரலாற்று சிறப்பு மிக்க அடைவாகும்.இதன் மூலம் பாடசாலைக்கும்,ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்த மாணவிகளுக்கும் ஏனைய சிறந்த பெறுபேறுகளையும், உயர்தர தகைமை சித்தியையும் பெற்றுக்கொடுத்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

தொகுப்பு
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *